விதிமீறி கட்டப்பட்ட 40 அடுக்குமாடி இரட்டை கட்டிடம் நொய்டாவில் தகர்த்தப்பட்டது...3700கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டதாக தகவல்
இந்தியா : நொய்டாவில் சூப்பர்டெக் நிறுவனத்தால் விதிமீறிக் கட்டப்பட்ட சூப்பர்டெக் நிறுவனத்தின், எமரால்ட் குடியிருப்பு சங்க இரட்டை கோபுரங்கள் இன்று மதியம் 2.30 மணிக்கு வெடிவைத்து தகர்க்கப்படுபட்டது ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இரட்டை கட்டடங்களை இடிப்பதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நேற்று நிறைவடைந்த நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் ட்ரோன் மற்றும் விமானங்கள் பறக்கவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இரட்டை கோபுர கட்டடத்தின் உள் பகுதியில் சுமார் 20,000 இடங்களில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டுள்ளன. மதியம் 2.30 மணிக்கு கட்டட தகர்ப்புப் பணி தொடங்கி, அதன் தொடர்ச்சியாக வெறும் ஒன்பதே விநாடிகளில் ஒட்டுமொத்த கட்டடமும் தரைமட்டமாகிட்டது. என, இந்தப் பணியை மேற்கொண்டுள்ள வெளிநாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டடம் ஒன்பது நொடிகளில் தரைமட்டம் ஆனாலும், அதில் இருந்து வெளியேறும் புழுதிப்படலம் முழுவதுமாக அடங்க 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பிறகு அந்த பகுதியில் வீடியோ கால் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.