
போதனை வேண்டாம் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் - தையிட்டி காணி உரிமையாளர்கள் ஆவேசம்
காணி விடுவிப்பு தொடர்பிலோ, மதங்கள் தொடர்பிலோ எமக்கு போதனைகள் செய்யவேண்டாம். அனைவருக்கும் சமமாக இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தி எமது நியாயமான கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் வலியுதுத்தியுள்ளனர்.
அத்துடன் வலி வடக்கு தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான கலந்துரையாடலுக்காக யாழ்ப்பாணம் வருகை தந்த நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார உள்ளூராட்சிமன்ற தேர்தலை காரணம் காட்டி கலந்துரையாடலின் இடை நடுவில் எழுந்து சென்றமை பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தியதுடன் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாகவும் கலந்துரையாடலில் பங்குபெற்றியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
யாழ் தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகார தொடர்பில் இன்று வியாழக்கிழமை யாழ் நாக விகாரையில்
நீதி அமைச்சர் பங்கு பெற்றலுடன் கலந்துரையாடலுக்கு பங்கு கொள்ளுமாறு மதத்தலைவர்கள் புத்திஜீவிகள் மற்றும் காணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலுக்கு வருகை தந்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூட்டம் ஆரம்பித்து சிறிது நேரம் பங்கேற்ற நிலையில் தேர்தல் காலம் காரணமாக குறித்த கலந்துரையாடலிலிருந்து செல்வதாக கூறி அவ்விடத்தை விட்டு நழுவிச் சென்றிருந்தார்.
இதையடுத்து திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் சிலர் தமது ஆதங்கங்களை ஊடகங்கள் முன்ல்ப் இவ்வாறு தெரிவித்தனர்.
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் நீதி அமைச்சருடன் கலந்துரையாடல் இடம் பெறும் என எமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கலந்து கொண்டோம்.
குறித்த கலந்துரையாடல் இடம் பெறுவதற்கு முன்னர் நீதி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனமான தேசிய நல்லிணக்க சகவாழ்வு மையம் எமது தையிட்டிப் பகுதிக்கு வருகை தந்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கலந்துரையாடலில் ஈடுபடும் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என கூறிய நிலையில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் குறித்த கலந்துரையாடல் பங்கு பெற்ற வில்லை.
யாழ் நாக விகாரையில் மாலை இடம் பெற்ற நீதி அமைச்சருடரான கலந்துரையாடலுக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர்.
குறித்த கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர் தனது தலைமை உரையில் சமாதானம் விட்டுக்கொடுப்பு என போதனைகளைச் சொல்லிவிட்டு தேர்தல் காலம் என்பதால் நான் செல்கிறேன் என கூறி எழுந்த சென்று விட்டார்.
நாங்கள் பல எதிர்பார்ப்புடன் குறித்த கலந்துரையாடலுக்கு சென்ற நிலையில் நீதி அமைச்சர் இடை நடுவில் எழுந்து சென்றது குறித்த கலந்துரையாடலுக்கு வருகை தந்த
சமயத் தலைவர்கள் ,புத்திஜீவிகள் மற்றும் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஒரு விடயமாக பார்க்கிறோம் .
அமைச்சர் சென்ற நிலையிலும் கலந்துரையாடல் தொடர்ந்து சென்றது.
நாம் தெளிவாக கூறினோம் நாங்கள் மதங்களை மதிப்பவர்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடத்தை தான் அகற்றச் சொல்கிறோம் இதை நீங்கள் மதவாதமாகவே இனவாதமாகவோ சித்தரிக்க வேண்டாம்.
எமது காணி என்பதற்கான ஆதாரம் எம்மிடம் ஆவணம் இருக்கிறது எமக்கு போதனை வேண்டாம் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என கூறினோம்.
குறித்த கலந்துரையாடலை திசை திருப்பும் முகமாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலின் இறுதியில் எழுந்து நின்று தையிட்டிப் பகுதியில் அறுநூறுக்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்கள் வாழ்ந்ததாகவும் அவர்கள் மீள்குடியேற அனுமதி கோருவதாகவும் தெரிவித்தனர்.
தையிட்டி விகாரை தொடர்பில் பேசுவதற்காக அழைத்துவிட்டு சிங்கள குடும்பங்களை மீள்குடியேற அனுமதி கேட்க்கும் கலந்துரையாடலாக இறுதியில் மாற்ற நினைக்கிறார்கள்.
நாங்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அமைப்பினர் முன்வைத்த கருத்து தொடர்பில் எதிர் கருத்து தெரிவிப்பதற்கு நேரம் கேட்டோம் எமக்கு வழங்கப்படவில்லை
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி குழு கூட்டங்கள் அரசியல்வாதிகளின் பங்கு பெற்றுதலுடன் இடம்பெற்ற நிலையில் ஆளுங்கட்சியில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் உறுப்பினர்களும் குறித்த கலந்துரையாடல்களில் பங்கு பற்றினர்.
ஆனால் விகாரை தொடர்பான கூட்டத்துக்கு மட்டம் நீதி அமைச்சர் தேர்தல் காலம் என கூறி இடை நடுவில் எழுந்து சென்றமை கூட்டத்தில் கலந்து கொண்டமை ஏற்றக்கூடிய விடையம அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சர் பங்குபற்றும் கலந்துரையாடலுக்கு பொது அமைப்பின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்ததுடன் எதிர்வரும் 11 ஆம் திகதி பிரதமரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளதும் குதிப்புடத்தக்கது
000