
நடிகை மலைகா அரோரா பிரபல கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தாரா?
நடிகை மலைகா அரோரா கவ்ஹாத்தியில் நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்ததிலிருந்து ஒரு பெரிய கிசுகிசு தொடங்கியது. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காராவும், அவரும் ராஜஸ்தான் அணியின் பெஞ்சில் இருந்து போட்டியைப் பார்த்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. சங்கக்காராவுடன் இணைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெர்சியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை மலைகா பார்த்தார். போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இருவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இருவரும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவத் தொடங்கின. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மலைகா ஸ்டேடியத்திற்கு வந்திருந்த நிலையில், ராஜஸ்தான் அணியுடன் அவருக்கு என்ன தொடர்பு என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்த ஜோடியைப் பற்றி பலரும் பேச ஆரம்பித்தனர். ஆனால், மலைகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த வதந்தியை மறுத்துள்ளன.
இரண்டு பேரை ஒன்றாகப் பார்த்தால் என்னென்னவோ பேசுகிறார்கள். குமார் சங்கக்காரா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். பின்னர் 2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதை அடுத்து, அவர் அணியில் வேறு பொறுப்புக்கு மாறினார். முன்னாள் கணவர் அர்பாஸ் கானை பிரிந்த பிறகு மலைகா அர்ஜுன் கபூருடன் காதலில் இருந்தார். இருப்பினும், இருவரும் கடந்த ஆண்டு நவம்பரில் பிரிந்தனர். ஆனால் இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
அர்ஜுன் கபூரின் சமீபத்திய படமான 'மேரே ஹஸ்பண்ட் கி பிவி' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தான் திருமணம் ஆகாதவர் என்று நடிகர் கூறியிருந்தார். 51 வயதான மலைகாவின் அர்பாஸ் கான் உடனான உறவு 1998 முதல் 2017 வரை நீடித்தது. அவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார். நடிகை மலைகா அரோரா, மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து ‘தையா தையா’ பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva