
முடிவடையும் தோனியின் ஐபிஎல் வாழ்க்கை?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் எம்.எஸ். தோனிக்கு, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் மோதுவதற்கு முன்னதாக, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா 'ஐபிஎல் 18' நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்.
ஐபிஎல்லில் 18 ஆண்டுகள் பங்கேற்றதைக் குறிக்கும் வகையில், தோனிக்கு இந்த நினைவுப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நினைவுப் பரிசு ஐபிஎல்லில் தோனியின் எதிர்காலம் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்த ஆண்டு 44 வயதை எட்டவுள்ள தோனியை, சிஎஸ்கே அணி தக்கவைத்துக் கொண்டது. ஆனால் அவரது உடல் தகுதி அந்த அளவுக்கு இல்லை என பரவலாக விமர்சனங்கள் கழுந்துள்ளது.
மேலும், சமீபத்தில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி தன்னை 9 ஆவது இடத்திற்குத் தாழ்த்திக் கொண்டார்.
இதனால் தோனி அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடியுமா என்ற சந்தேகம் இரசிகர்களுக்கு ஏற்பட்டது.
எனினும் இதுவரை, ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே அணியில் தனது எதிர்காலம் குறித்து தோனி எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
000