
‘எல் 2: எம்புரான்’ படத்தின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டது
மோகன்லால் நடித்து மார்ச் 27-ல் வெளியான படம், ‘எல் 2: எம்புரான்’. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வில்லன் பெயரை ‘பாபா பஜ்ரங்கி' என வைத்துள்ளனர். சில இடங்களில் வரும் வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து படத்தில் உள்ள 3 நிமிட சர்ச்சைக் காட்சிகளை நீக்கவும், வில்லன் பெயரை மாற்றவும் தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “எம்புரான் படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் விஷயங்கள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அறிந்தேன். எனது எந்தப் படமும் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது குறிப்பிட்ட பிரிவினர் மீது வெறுப்பைத் தூண்டும் விதத்தில் இல்லை என்பதை உறுதி செய்வது, ஒரு கலைஞனாக எனது கடமை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருந்துகிறேன். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva