யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பொது வைத்தியசாலைக்கான ஆளனி வெற்றிடங்களை நிரப்புவதில் மாகாண அரசுகள் பின்னடித்தது வருகின்றன
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான தகுதி வாய்ந்த பொறுப்பு வைத்திய அதிகாரி நியமிக்கப்படாதுள்ளதுடன் மத்திய சுகாதார அமைச்சினால் இதுவரை காலமும் வெற்றிடமாக காட்டப்பட்டு வந்த பதவி வெற்றிடமும் மாகான அமைச்சினால் நீக்கப்பட்டுள்ளதானது பல்வேறு சந்தேகங்களையும் தோற்று வித்துள்ளது.
வட மாகாணத்தின் தொடர் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட பொது வைத்தியசாலைக்கான தேவைகளை நிறைவு செய்வதிலும் ஆளனி வெற்றிடங்களை நிரப்புவதிலும் மத்திய மற்றும் மாகாண அரசுகள் பின்னடித்தது வருகின்றன.
குறிப்பாக மாவட்ட பொது வைத்தியசாலைக்கான நிரந்தர பொறுப்பு வைத்திய அதிகாரி நியமிக்கப்படாத நிலை தொடர்நும் காணப்படுகின்றது. அதாவது, சிரேஸ்ர மருத்துவ நிர்வாக உத்தியோகத்தர் (Senior medical administrative Grade) தரத்திலுள்ள ஒருவரை நியமிக்க வேண்டிய நிலையில் தற்போது மருத்துவ உத்தியோகத்தர் (Primalary Grade ) தரத்திலுள்ள ஒருவரே பொறுப்பிலுள்ளமை குறிப்பித்தக்து.
இவ்வாறான நிலையில் கடந்த காலங்களில் தொடர்சியாக மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான பதவி வெற்றிடம் காட்டப்பட்டு வந்துள்ளதுஆனால் அதற்கான் வெற்றிடம் நிரப்ப படாமலே தற்போது பதவி வெற்றிடமும் நீக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.