Category:
Created:
Updated:
மந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் அனுமதியுடன் கமநல சேவை திணைகளத்தின் ஆலோசனையுடன் குறித்த குளத்தின் நீர்ப்பாசன தொகுதி புனரமைக்கப்பட்டுள்ளது.இச் செயற்றிட்டத்திற்காக குறித்த நீரர்ப்பாசன தொகுதியினை பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ளும் குடும்பங்களின் மனித வலுக்கள் பயன்படுத்தப்பட்டு, அவர்களுக்கான உலருணவு பொருட்கள் றகமா நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்டது.உணவிற்கான வேலைத்திட்டத்தின் கீழ் தேவைப்பாடுடைய 45 குடும்பங்களுக்கே இவ்வாறு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.குறித்த பகுதியில் 60 ஏக்கர் நிலப்பரப்பிற்கான நீரினை தடையின்றி வளங்குவதான் ஊடாக 90 000 Kg நெல் உற்பத்தியினை ஊக்குவிப்பதன் நோக்காகக் கொண்டு இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறி்ப்பிடத்தக்கது.