Category:
Created:
Updated:
முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 219 ஆம் ஆண்டு வெற்றிநாள் 25.08.2022 நேற்றுமாலை முல்லைத்தீவு மல்லாவி நகரில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.அந்த வகையில் மல்லாவி வர்த்தக சங்கத்தினர் தலைமையில் மல்லாவி மத்திய பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி நினைவுகூரல்கள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டன.இந் நிகழ்வில் வர்த்தக சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.