முல்லைத்தீவு மாவட்ட எல்லை மீளாய்வு கூட்டம் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது
முல்லைத்தீவு மாவட்ட எல்லை மீளாய்வு கூட்டம் இன்றையதினம் காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.இதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச எல்லைகள் மற்றும் கிராம அலுவலகர் எல்லைகளை மறு சீரமைப்பு செய்தல் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு ஒரு சில பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இதில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின், எல்லை மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்ததாக மறுசீரமைப்பு செயற்பாட்டு முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டன.இந்தக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்) , மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் , உதவிப்பிரதேச செயலாளர்கள், மாவட்ட நிலஅளவை அத்தியட்சகர் , கிளிநொச்சி , வவுனியா மாவட்ட சிரேஷ்ட நில அளவை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப் பகுதி உத்தியோகத்தர்கள் , ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.