பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட நாகதேவன் துறை இறங்கு துறைக்கு செல்வதற்கான பாதை இதுவரை புணரமைக்கப்படாத நிலையில்
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட நாகதேவன் துறை இறங்கு துறைக்கு செல்வதற்கான பாதை இதுவரை புணரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதனால் கடலுக்குச் செல்ல முடியாத நிலையை எதிர்கொள்வதாக ஞானிமடம் கடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நாகதேவன் துறை இறங்குதுறையானது நீண்ட காலம் புணரமைக்கப்படாத நிலையில் கானப்படுகின்றது.அத்துடன் இறங்கு துறைக்கான பிரதான வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
அதாவது 1990 ஆண்டுக்குப் பின்னர் இத்துறையும் துறைக்கு செல்லும் குறித்த வீதியும் புனரமைக்கப்படாத நிலை கானப்பட்டது அத்துடன் 1993 ஆம் ஆண்டு இடம் பெற்ற யுத்தம் காரணமாகவும் மோசமாக சேதமடைந்ததுடன் 2012ம் ஆண்டுவரைக்கும் தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப் படாத பகுதியாகவும் கானப்பட்டுள்ளது.
தற்போது இந்தப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிறு கடற்றொளிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் குறித்த கடல் பகுதிக்கு செல்லும் பாதையும் இறங்க துறையும் நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது.
இதனால் கடல் பெருக்கு காலங்களிலும் ஏனைய காலங்களிலும் கடற் தொழிலுக்கு செல்வதில் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கடத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர் அதாவது குறித்த வீதியால் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் கடத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளன எனவே இவ்வாறு ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் நீளமான குறித்த வீதியையும் இறங்கு துறையினையும் புணரமைத்து தருமாறு பிரதேச கடத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.