Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் அவர்களால் நேற்றைய தினம் (22.08.2022) பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காணி உரித்து தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் பி.ப 3.30 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு .க.கனகேஸ்வரன் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் , மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் , மாவட்ட பொறியியலாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர், மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.