Category:
Created:
Updated:
கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் மாணவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் (17-08-2022) நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் கீழ் உள்ள முதல் நிலை பாடசாலைகளில் ஒன்றாக காணப்படும் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் மாணவர்களின் சத்திய பிரமாண நிகழ்வும் பாடசாலை முதல்வர் க.கருணானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முருகானந்தா வித்யாலயத்தின் பழைய மாணவனும் பிரான்ஸ் ஒன்றியத்தை சேர்ந்த கிருபானந்தன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான சின்னத்தை சூட்டி வைத்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.