Category:
Created:
Updated:
உலக உணவு திட்டத்தினால் உதவித்தொகைகள் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச பிரிவுகளில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், மாற்று வலுவுள்ளோர்கள் என 256 பயனாளிகள் உள்வாங்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் முதற்கட்டமாக பயனாளிகளுக்கு 15000 ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டிருந்ததுடன் மூன்று மாதகாலங்களுக்கு இவ் உதவித்திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.மல்லாவி இலங்கை வங்கியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர்கள் , உலக உணவு திட்டத்தின் முல்லைத்தீவு மாவட்ட பணிப்பாளர், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.