வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் முன்னெடுத்து வரும் ஸார்ப் நிறுவனம்
வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் முன்னெடுத்து வரும் ஸார்ப் நிறுவனம் இதுவரை இருபத்தொரு இலட்சத்து ஐம்பத்தாறாயாயிரத்து முன்னூற்று நாற்பத்து நான்கு சதுரமீற்றர் பரப்பளவில் வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக அதன் நடவடிக்கை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பணிகள் தொடர்பில் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதாவது, இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும்; கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் இருபத்தொரு இலட்சத்து ஐம்பத்தாறாயாயிரத்து முன்னூற்று நாற்பத்துநான்கு சதுரமீற்றர் பரப்பளவில் (2. 156.344அ) இருந்து முப்பத்திமூவாயிரத்து தொளாயிரத்து இருபத்திரெண்டு (33,922) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும் அம்பகாமம்; பகுதியிலும்; துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.