முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் தமது தொழிலை சுதந்திரமாக செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்;தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் தற்போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் மற்றும் வெளிமாவட்ட மீன்வர்களின் அத்துமீறல்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் தமது வாழ்வாதாரத்தொழில்கள் பாதிக்கப்படுகின்றன என்றும் இதற்கு தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தருமாறு இப்பகுதி கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வடுத்து வருகின்றனர்.
அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் முகத்துவாரம் நல்ல தண்ணித்தொடுவாய் முதல் பேய்ப்பாறைப்பிட்டி வரைக்குமான 74 கிலோமீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளிலும் ஆழ்கடல் பகுதிகளிலும் தமது வாழ்வாதாரத்தொழில்களை மேற்கொள்ளும் வகையில் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மற்றும் அனுமதிகளை மீறிய தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனன்றும் இதனால் தமது தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும் கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட ஏராளமான குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்கே பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது நிபந்தனைகளை மீறிய அட்டைத்தொழில் வெளிச்சம் பாச்சி மீன்பிடித்தல் கரைவலைப்பாடுகளில் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி மீன்பிடியல் ஈடுபடுதல் மற்றும் சிறுகடல் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்ளுதல் என்பன பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன என்றும் கடற்தொழிகளைவிடுத்து தற்போது கூலி வேலைகளுககே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.