Ads
கிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எரிபொருள் பெற்றுக் கொள்வாதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் இடர் பாடுகள் கானப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.
இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் இலகுவாக எரிபொருள் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் வசித்துவருகின்ற மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான எரிபொருளினை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்புநிலையங்களில் வரிசையில் காத்திருக்காது எரிபொருளினை பெற்றுக்கொள்ளமுடியும்.
மாவட்டத்தில் இயங்கும் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தங்களுக்கான எரிபொருளை தற்போதைய நடைமுறைகளை பின்பற்றி சிரமங்களின்றி முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளோடு எரிபொருள்நிரப்பு நிலைய முகாமையாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனவும் தெரிவித்துள்ளார்
Info
Ads
Latest News
Ads