Ads
நியூசிலாந்தில் முதன்முறையாக இருவருக்கு புதிதாக உருமாறிய ஒமைக்ரான் பிஏ.2.75 வைரஸ் தொற்று!
நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில், புதிதாக உருமாறிய ஒமைக்ரான் பிஏ.2.75 வைரஸ் இந்தியாவை தவிர இந்த புதிய வகை வைரஸ் மேலும் 7 நாடுகளில் பரவி இருப்பதை உலக சுகாதார மையம் ஏற்கனவே கூறியுள்ளது. இப்போது நியூசிலாந்தில் ஒமைக்ரான் பிஏ.2.75 வைரஸ் பரவி உள்ளது.
அங்கு இருவருக்கு புது வகை வைரஸ் பாதித்துள்ளது. தொற்று பாதித்த இருவரும் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது. ஆனால், இது மிகவும் கடுமையான நோய்க்கு வழிவகுக்கும் என்பதற்கு தற்போதைய ஆதாரம் இல்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில், 9629 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்தனர்.
Info
Ads
Latest News
Ads