
கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புகளும் விவசாயிகள் எந்தவிதமான சேதன உரங்கள் அல்லது இராசாயன உரங்களோ வழங்கப்படாத நிலை என காணப்படுகின்றது கோரிக்கை விடுத்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேட்டுநில பயிர்செய்கைகளும் உப உணவுச் செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இவ்வாறான செய்கைகளுக்கு இதுவரை எந்தவிதமான சேதன உரங்கள் அல்லது இராசாயன உரங்ககளோ வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் கமநல சேவை நிலையங்களின் கையிருப்பில் தற்போது உள்ள இராசயன உரங்களை பகிர்ந்தளிக்க கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கமநல சேவை நிலையங்களில் 3. 8320 மெற்றிக் தொன் யுறியா 20. 3493 மெட்ரிக் தொன் டிஎஸ்பி 20. 3133 மெட்ரிக் தொன் m.o.p. என்பன கையிருப்பில் உள்ளன.இதிலும் குறிப்பாக அக்கராயன் குளம் கமநல சேவை நிலையம் மற்றும் முழங்காவில் கமநல சேவை நிலையம் ஆகியவற்றில் அதிகளவான உரங்கள் கையிருப்பில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகின்றது.
எனவே குறித்த உரங்களை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும்மேட்டுநிலச் செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்ட்டுள்ளன.
குறிப்பாக இந்த கோரிக்கை மாவட்ட அரச அதிபரிடமும் முன்வைக்க இருப்பதாகவும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் விவசாயிகளும் தெரிவித்துள்ளனர். எனவே இவ்வாறு கையிருப்பில் இருக்கும் உரத்தினை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.