
கிளிநொச்சி மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது
மேற்படி கலந்துரையாடலானது மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் செவ்வாய் (21-06-2022) நடைபெற்றது.இக் கலந்துரையாடலின் போது• அரிசி ஆலைகளில் அரிசி விலை நிர்ணயம்.• நெல்கொள்வனவு.• போக்குவரத்து,எரிபொருள் கொள்வனவு• நுகர்வோர் கட்டுப்பாட்டுச்பையின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் தமக்கு எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஒரு முறைமையை வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கு பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் மாவட்ட மட்டத்தில் காட் முறைமை ஒன்று அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும் சாதாரண குடும்பம், மீன்பிடியாளர்கள், விவசாயம் செய்வோர் மற்றும் ஏனைய அமைப்புக்கள் எனப்பிரித்து வழங்கவிருப்பதாகவும் முறைகேடுகள் நடைபெறாத வகையில் மாவட்ட உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.மேலும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துமாறு கூறப்பட்ட விலைநிர்ணயத்திற்கு அமைவாக அனைவரும்செயற்படுமாறும் அறிவுறுத்தலை வழங்கியிருந்தார்.இக்கலந்துரையாடலில் மாவட்டச்செயலக அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள், வர்த்தக சங்கத்தினர், மொத்த சில்லறை விற்பனையாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.