
தேசிய சிறுவர் அதிகார சபையின் 2022 தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய தங்குமிட வசதிகளை வழங்கும் விடுதி உரிமையாளுக்கான தேசிய விழிப்புணர்வு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட செயலகக்திற்குட்பட்ட தங்குமிட வசதிகளை வழங்கும் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கருந்தரங்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.விமலநாதன் தலைமையில் திங்கட்கிழமை (20-06-2022) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக அரியாத்ததை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமை மற்றும் துஷ்பிரயோகங்களை தடுத்தல் , பாலியல் குற்றச்செயல்களைத் தடுத்தல், எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றி சிறுவர்கள், பெண்களை தங்குமிடங்களில் அனுமதிக்க முடியும் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்(நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ். குணபாலன் (காணி) முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் திரு.க.வாசுதேவ , முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு.எம்.அன்வர்தீன் , முல்லைத்தீவு மாவட்ட செயலக மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்ட உத்தியோகத்தர்கள், உளவளத்துணையாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட தங்குமிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.