
பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரோடு டக்ஸன் பியூஸ்லஸின் உடல்
மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இன்று (7) மாலை 5 மணியளவில் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த மன்னார் பனங்கட்டு கொட்டு கிராமத்தைச் சேர்ந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடன் கடந்த 3 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அன்றைய தினம் பூதவுடல் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பூதவுடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட நிலையில் உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு பூதவுடல் எடுத்து வரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று மதியம் 1 மணியளவில் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்னாரது இல்லத்தில் இடம்பெற்றது.