தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா உயிர் பலி
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,516 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,675 பேர் ஆண்கள், 1,844 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 20 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 137 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 331 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று 37 பேர் உயிரிழந்துள்ளார். 19 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது. இன்று 20,237 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 92ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.