கிளிநொச்சி மலையாளபுரத்தில் அமைந்துள்ள விசேட தேவை உட்பட்டோருக்கான வலையமைப்பு வளாகத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(24-01-2022) நடைபெற்றுள்ளது
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள விசேட தேவை உட்பட்டோர் வலையமைப்பு (இலங்கை) வளாகத்தில் விசேட தேவை உட்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் சிறுவர் பூங்கா ஒன்றினை அமைக்கும் பொருட்டு கொடையாளரான யாழ் குடத்தனை பொற்பதி சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து நியூசிலாந்து நாட்டில் வசித்து வரும் சிமாட் பீல் பசார் தொழில் நிறுவனத்தின் ஸ்தாபகரான செல்வதாஸ் (தாஸ்) என்பவரினால் அவரது தாயாரான அரியதாஸ் மேரிறெஜினா ஞாபகார்த்தமாக சுமார் 16 இலட்சம் ரூபாய் செலவில் குறித்த சிறுவர் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(24-01-2022) பகல் ஒரு மணிக்கு நடைபெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறித்த சிறுவர் புங்காவிற்க்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். மேற்படி நிகழ்வில் பங்குத்தந்தை பாரதிபுரம் வித்தியாலய முதல்வர் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர் பாரதிபுரம் வட்டார பிரதேசசபை உறுப்பினர் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் இல்ல குழந்தைகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.