சினிமா செய்திகள்
சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறார் சமந்தா
உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் த
சினிமாவில் நடிக்க தொடங்கி 13 ஆண்டுகள்...... யோகிபாபு நெகிழ்ச்சி
தமிழ் திரையுலகில் 2009-ல் 'யோகி' படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது
வசூல் சாதனைப்படைத்தது 'பொன்னியின் செல்வன்'
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி இதுவரை ரூ.665 கோடி வசூல் குவித்து சாதனை நிகழ்த்தி உள்ளது
'பூமர் அங்கிள்' படத்தின் டிரைலர் வெளியானது
யோகி பாபு, ரோபோ சங்கர், ஓவியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வதீஸ் இயக்கியுள்ளார். ம
'பாபா' படத்துக்கு டப்பிங் பேசிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த பாபா படம் 2002-ல் திரைக்கு வந்தது. நாயகியாக மனிஷா கொய்ரலா வந்தார். சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்து இர
விரைவில் மீனாவின் திரிஷ்யம் 3-ம் பாகம்
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று
தமிழ்நாட்டின் 'சார்லி சாப்ளின்' என்று அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர். நகைச்சுவையை
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் 'ஃபைண்டர்'
இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'. இவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத
வணிக படங்களில் நடிக்க விரும்பாத விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி "நான் வணிக படங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்ன
ஹன்சிகா கொடுத்த பேச்சிலர் பார்ட்டி
தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பி
மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக் திருமணம்
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. திருமண விழாவிற்கு கவுதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்த
'துணிவு' படத்தின் அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியர்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்
Ads
 ·   · 5058 news
 •  · 3 friends
 • I

  7 followers

நடுவானில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு விமானத்தில் பிரசவம்

நடுவானில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார்.கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் டாக்டர் ஆயிஷா காதிப். இவர் சம்பவத்தன்று கத்தார் நாட்டின் தோஹாவில் இருந்து உகாண்டா நாட்டின் என்டெப்பே செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார்.


அந்த விமானத்தில், சவுதி அரேபியாவில் இருந்து உகாண்டாவில் உள்ள சொந்த ஊருக்கு, இடம் பெயர்ந்த பெண் தொழிலாளி பயணம் செய்தார். அவர் கர்ப்பிணி ஆவார். இவருக்கு விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது விமானத்தில் டாக்டர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று பணிப்பெண் ஒருவர் விசாரித்துள்ளார்.


உடனே டாக்டர் ஆயிஷா எந்த தயக்கமும் இன்றி, தன் இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தில் கூட்டமாக இருந்த இடத்துக்கு சென்றார். அவர் யாரேனும் மாரடைப்பு போன்ற ஆபத்தான நிலையில் தவித்துக்கொண்டிருக்கக்கூடும் என்று கருதினார். ஆனால் அங்கே பிரசவ வலியில் கர்ப்பிணிப்பெண் துடித்துக்கொண்டிருந்தார். அவருக்கு டாக்டர் ஆயிஷா பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் டாக்டர் ஆயிஷாவுக்கு அந்த விமானத்தில் பயணித்த நர்ஸ் ஒருவரும், குழந்தை நல மருத்துவர் ஒருவரும் உதவினர்.


அப்போது அந்த விமானம் நைல் நதிக்கு மேலே 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்த பிரசவத்தில் கர்ப்பிணிப்பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.


டாக்டர் ஆயிஷா அந்த பெண்ணுக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்து, பெண் குழந்தை பிறந்தபோது அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர். அந்த குழந்தைக்கு டாக்டர் ஆயிஷாவின் பெயரை ‘மிராக்கிள் ஆயிஷா’ என்று வைத்துள்ளனர். இதில் மகிழ்ந்து போன டாக்டர் ஆயிஷா, ஆயிஷா என்று பதிக்கப்பெற்றிருந்த தனது தங்க கழுத்தணியை (நெக்லஸ்) புதிதாக பிறந்த அந்த பெண் குழந்தைக்கு பரிசாக அளித்தார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 341
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads