Ads
மன்னாரில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
மன்னாரில் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது.
அடம்பன் காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையினை தொடர்ந்தே சுமார் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை நேற்று (Sunday Dec, 20) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் பன்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில் அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரணவல ஆராய்ச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மன்னார் யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் பயணித்த வாகனத்தின் இருக்கைகளினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 14 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதோடு, மன்னார் சாந்திபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டார்.
Info
Ads
Latest News
Ads