சினிமா செய்திகள்
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
Ads
 ·   ·  71 news
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அன்னை அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றபட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் நேற்று கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்களின் வேண்டுதலாகவும் உலகெமெங்குமுள்ள ஒட்டுமொத்த தமிழினத்தினதும் அமைப்புக்கள் கட்சிகளினதும் வேண்டுகோளையும் ஏற்று அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் (15.03.2021) முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என இன்றுடன் 17 நாட்கள் பசித்திருந்த அன்னை அம்பிகை கோரிக்கைகளில் ஒன்று முழுமையாவும் இன்னொன்று அண்ணளவாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே வெற்றியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் கேட்கப்பட்டுள்ளார். 

அன்னை அம்பிகை முன்வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்(IIIM), அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரித்தல், சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கான ஐ.நா வின் பரிந்துரைத்தல்  ஆகிய நான்கு அம்சக்கோரிக்கைகளில் பிரித்தானியாவின் ஐ.நா.வுக்கான இறுதி வரைபில் ஒரு புதிய விதமான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று (IIM இன் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய) உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிரந்த ஐநா கண்காணிப்பளருக்கு பதிலாக, தொடர்ச்சியாண கண்காணிப்பு நடைமுறை ஓன்றும் உருவாக்கப்படவுள்ளது. 

இந்நிலையிலேயே, மனித உரிமை செயற்பாட்டாளர் அன்னை அம்பிகை மாபெரும் வெற்றியுடன் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3.00 -5.00 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை, மத தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முடித்துக்கொள்ள உள்ளார்.  

இது நீண்டதொரு தமிழின போராட்ட வரலாற்றில் அகிம்சைவழி மாபெரும் வெற்றியாகும். ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குரலாய் அம்பிகை முன்னெடுத்த அறப்போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றுமாறு நேற்று பிரித்தானியாவில் மாபெரும் பேரணியை நிகழ்த்திய புலம்பெயர் தமிழர்களுக்கும் உலகெங்கும் அவருக்காக குரல் கொடுத்த தமிழினத்தின் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகின்றது. 

நிகழ்வினை இன்று மாலை இலண்டன் நேரம் 3.00 -5.00 மணிவரை நேரலையாக பின்வரும் இணைப்பில் மெய்நிகர் வழியாக உலெகெங்கும் உள்ள அனைவரும் பார்வையிட்டு அம்பிகைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கமுடியும். 

https://us02web.zoom.us/j/86153063444?fbclid=IwAR1susL3ZmS_WA7siY7Y_gPUPd1_aF--i4eQW2X6yZDXsd3sNakAxFlsXPU#success

மும்மத தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள குறித்த மெய்நிகர் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பன்னாட்டு அரசியல் பிரமுகர்களின் சிறப்புரைகளும் அன்னை அம்பிகையின் வெற்றியுரையும் இடம்பெறவுள்ளது. 

இதனிடையே, நேற்று அன்னை அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றக்கோரி அவரது போராட்டத்தளத்தின் முன் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வழமைபோல் நடைபெறும் அன்னை அம்பிகையின் ஆதரவு மெய்நிகர் நிகழ்ச்சியிலும் அன்னை அம்பிகையின் போராட்டம் வெற்றிப்பாதையை அடைந்துள்ளது. 

  • 682
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads