அம்பிகை செல்வகுமாரின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வருகின்றது
பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி 17 வது நாளாக அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
பிரித்தானிய அரசிடம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என தெரிவித்து கடந்த 17 நாட்களாக அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அவரின் கோரிக்கைகளில் ஒன்று முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே உண்ணாவிரதத்தை வெற்றியுடன் முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்பிகை செல்வக்குமாரின் போராட்டம் இன்று பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 3.00 முதல் 5.00 மணியளவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.