சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் உடலங்களை மின்தகன நிலையங்களுக்கு கொண்டுசெல்ல உதவியா ரொறன்ரோ மனிதாபிமானத்தின் குரல் அமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் உடலங்களை மின்தகன நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்குரிய நிதியுதவி ரொறன்ரோ மனிதாபிமானத்தின் குரல் அமைப்பின் ஊடாக நேற்றைய தினம் (2021.09.14) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் வழங்கிவைக்கப்பட்டது.கிளிநொச்சி மாவட்டத்தில் மின்தகன மயானம் இல்லாத சூழலில், கொரோனாப் பெருந்தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை வவுனியா (பூந்தோட்டம்) , கெக்கிராவ, அனுராதபுரம், பொலனறுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்கு இறந்தவர்களின் உறவினர்களிடமிருந்தே பணம் அறவிடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இந் நோய்த்தொற்றுக் காலத்தில் தொழில் வாய்ப்புக்களையும், வருமான மூலங்களையும் இழந்து பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களின் நலன் கருதி, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.சிவஞானம் சிறீதரன் அவர்களால் ரொறன்ரோ மனிதாபிமானத்தின் குரல் (Toronto Voice of Humanity) அமைப்பிற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, அவ் அமைப்பின் இயக்குனர்களான, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) தலைவர் திரு.துரைராஜா, மற்றும் கனடா, உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.லோகேந்திரலிங்கம் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி வைத்தியசாலையின் அமரர் ஊர்திக்;கான எரிபொருட்செலவுக்கென ஒருலட்சம் ரூபா நிதியுதவி கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ.அருணாசலம் வேழமாலிகிதனால், கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி செல்வராஜா சுகந்தனிடம் கையளிக்கப்பட்டது.அதேவேளை இவ்வருடம் டிசெம்பர் மாதம் வரை, கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் மரணமடைபவர்களின் உடலங்களை இலவசமாக மின்தகன நிலையங்களுக்குக் கொண்டுசெல்வதற்குரிய முழுமையான போக்குவரத்துச் செலவினை தான் ஏற்பாடு செய்துதருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.சிவஞானம் சிறீதரன் அவர்கள் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் உறுதியளித்துள்ளார்.மேற்படி நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.சிவஞானம் சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் கௌரவ.சண்முகராஜா ஜீவராஜா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி நகர வட்டார அமைப்பாளர் திரு.கணபதிப்பிள்ளை ஆனந்தவடிவேல் மற்றும் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்திய சாலையின் வைத்தியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.அதேவேளை தற்போது கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் பயன்பாட்டிலுள்ள அமரர் ஊர்தி, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.சிவஞானம் சிறீதரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ரொறன்ரோ மனிதாபிமானத்தின் குரல் (Toronto Voice of Humanity) அமைப்பின் 17 லட்சம் ரூபா நிதிப்பங்களிப்பில் 2013 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 801
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads