கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏறத்தாழ 23 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் மற்றும் செய்கையாளர்களுக்கான சேவையை வழங்கும் விதமாக கிளிநொச்சி கமநல சேவைமையம் காணப்படுகின்றது.இந்த நிலையில் குறித்த கமநல சேவை நிலைய எல்லைக்குள் காணப்படும் 09 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ளடக்கிய வகையில் இரு கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான முன்மொழிவுகள் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தொடர்ந்து அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளனஅதாவது குமரபுரம் பரந்தன் உமையாள்புரம் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கோரக்கன் கட்டு ஆகிய 6 கிராம அலுவலர் பிரிவுகளைக் உள்ளடக்கிய வகையில் சுமார் எண்ணாயிரத்து 413 வயல்களிலும் 950 ஏக்கர் ஐம்பத்தி ஆறு ஏக்கர் நிலம் பயிற்சியை மேற்கொள்ளும் 1883 விவசாய குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில் பரந்தன் கமநல சேவை நிலையத்தினையும் ஊரியான் முரசுமோட்டை கண்டாவளை ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் பதினோராயிரத்தி 371 ஏக்கர் வயல்களிலும் 668 ஏக்கர் மேட்டுக்காணிகளிலும் பயிர் செய்கை மேற்கொள்ளும் 1443 விவசாய குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில் கண்டாவளை கமநல சேவை நிலையத்தினை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளனகிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 08 கமநல சேவை நிலையங்கள் உள்ள நிலையில் மேலும் இரு கமநல சேவை நிலையங்கள் அமைப்பதுடன் 10 கமநல சேவை நிலையங்களாக இது அதிகரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது