முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் உதவி சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஆளணி வெற்றிடங்கள் நிரப்ப படாத நிலையில் காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பதவி வெற்றிடம் மற்றும் உதவி சுகாதார வைத்திய அதிகாரி பதவி வெற்றிடம் என்பன தொடர்ந்து நிரப்பப்படாத நிலையில தொடர்ந்தும் நெருக்கடி நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் உதவி சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஆளணி வெற்றிடங்கள் நிரப்ப படாத நிலையில் காணப்படுகின்றது.தற்போதைய கொவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதாவது மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் சுகாதார வைத்திய அதிகாரி மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய இரண்டு பிரிவுகளையும் கண்காணிக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே நேரம் மல்லாவிக்கான உதவி சுகாதார வைத்திய அதிகாரியும் இதுவரை நியமிக்கப்படவில்லை இதனைவிட பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையில் வாகன வசதிகளும் இல்லாத நிலை காணப்படுகிறதுநாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட -19 அச்சுறுத்தல் காரணமாக மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பகுதிகளில் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன இதனைவிட இரு பிரிவுகளிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் குறித்த சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தமதது சேவைகளை முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றதுஅத்துடன் குறித்த இரு பிரதேசங்களும் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களாக போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளாகவும் காணப்படுகின்றன.குறிப்பாக பழைய முறிகண்டி ஆரோக்கியபுரம் மூன்று முறிப்பு என பல்வேறு பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களாக காணப்படுகின்றன.இதனை விட மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் தங்குமிட வசதி உணவு வசதிகள் இன்மை போக்குவரத்து வசதிகள் இன்மை என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் காணப்படுகிறது எனவே இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் சுகாதார வைத்திய அதிகாரி பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.