போலீசாரின் முழுமையான ஆதரவுடன் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்குளம் உடுபாற்றுக்கண்டல் உப்பாறு ஆகிய போன்ற பகுதிகளில் போலீசாரின் முழுமையான ஆதரவுடன் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் பிரதேச செயலாளரின் முயற்சியால் ராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த நிலையில் தற்போது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மருதங்குளம் உடுப்பாற்றுக்கண்டல் உப்பாறு போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக இரணைமடுக் குளத்தை அண்டிய பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த திருவையாறு பகுதியை சேர்ந்த டிப்பர் வாகனங்களும் உழவு இயந்திரங்களும் கிளிநொச்சி போலீசாரின் முழுமையான ஆதரவுடன் குறித்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டு சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக இந்தப் பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் நீர்ப்பாசன வாய்க்கால்கள் கழிவு வாய்க்கால்கள் என்பவற்றில் நாளாந்தம் 60 தொடக்கம் 70கியூப் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டு வெளி இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.தினமும் குறித்த பகுதிக்கு சிவில் உடைகளில் வரும் கிளிநொச்சி பொலிசார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களிடம் சமரசம் பேசி விட்டு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் டிப்பர் வாகனங்களையும் உழவு இயந்திரங்களையும் பாதுகாப்பாக அனுப்பி விட்டு செல்கின்றனர் என்றும் விவசாயிகள் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.எனவே குறித்த பகுதியில் இராணுவத்தினரின் உதவியை கொண்டு சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்தி தமது பயிர்செய்கை நிலங்களை பாதுகாக்க வேண்டும் என பிரதேச விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.