வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு ஊரடங்கு காலத்தில் உணவளிக்கும் கிளிநொச்சி ஊடகவியலாளர்கள்
கிளிநொச்சி மற்றும் பரந்தன் ஆகிய நகரப்பகுதிகளில் வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு ஊரடங்கு காலத்தில் உணவளிக்கும் செயற்பாட்டினை கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் அனாதரவாக இருக்கின்ற யாசகர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்குரிய உணவின்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் குறிப்பிட்ட சில தினங்கள் உணவின்றி கஷ்டப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததுஇந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் மையம் சார்பாக அவர்களுக்கு உணவு வழங்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வந்தனர்இந்த நிலையில் மனித நேயமிக்க கொடையாளர்களின் பங்களிப்புடன் குறித்த பகுதிகளில் கானப்படும் ஆதரவற்றோருக்கு தினமும் மதியம் மற்றும் இரவு நேர உணவுகளை அவர்கள் வசிக்கின்ற இடங்களுக்கு கொண்டு சென்று வழங்குகின்ற செயற்பாட்டை தொடர்ந்து 10 நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர்முறிண்டி நேசக்கரங்கள் என்ற அமைப்பு வர்த்தகர்கள் தங்களது பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர்இந்த நிலையில் இவ்வாறான செயற்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து உள்ளனர்கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கொடையாளர்கள் தங்களுடைய ஆதரவை நல்கி வருகின்றனர்அத்துடன் பொது மக்கள் கூடுகின்ற சதோச விற்பனை நிலையம் மற்றும் பொது இடங்களில் அவர்களுக்கான முகக் கவசங்ள் தொற்று நீக்கிகள் வழங்குதல் என பல்வேறு செயற்பாடுகள் கிளிநொச்சி மாவட்ட ஊடக மையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது