Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் பயன்படுத்தப்படாத நிலையில் கைவிடப்பட்ட நிலையிலும் வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலும் ஆக மொத்தம் 46 குளங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு கைவிடப்பட்ட குளங்களை விடுவித்து அதன் கீழான காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் தற்போது 16 வரையான குளங்கள் பாவனையில் காணப்படுவதுடன் இவ்வாண்டில் 154 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த பெரும் போகத்திற்கான தயார்படுத்தலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.