கிளிநொச்சி கல்லாறு பேய்ப்பாறைப்பட்டி பிரதான வீதியை புனரமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபா தேவை என வீதி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியில் சுண்டிக்குளம் சந்தியிலிருந்து கல்லாறு கடற்கரைக்குச் செல்லும் சுமார் 16 கிலோ மீட்டர் நீளமான வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.அதாவது சுண்டிக்குளம் கடல் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளுக்காக சென்று வருகின்ற அதேநேரம் கல்லாறு பிரமந்தனனாறு புன்னை நீராவி கிராமங்களுக்கான மக்களும் இந்த வீதியை பயன்படுத்தி வருகினன்றனர்.எனவே இந்த வீதி நீண்டகாலமாக புனரமைக்கப் படாத நிலையில் காணப்படுவதனால் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் பாரிய குன்றும் குழியுமாககானப்படுவதுடன் வீதிகள் அழிவடைந்தும் காணப்படுகின்றன குறிப்பாக வீதிகளில் சில பகுதிகள் வெள்ள நீரினால் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டும் காணப்படுகின்றது.இதனால் இவ்விதியை பயன்படுத்தும் கடற்தொழிலாளர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவே குறித்த வீதியை புனரமைத்து தருமாறு தொழிலாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேற்படி வீதி அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகி வருவதனால் தரைமட்டத்திலிருந்து 4 மீட்டர் வரையான உயரத்துக்கு வீதியை உயரமாக புனரமைக்க வேண்டி உள்ளது. எனவே குறித்த வீதியை புனரமைப்பதற்கு சுமார் 1300 மில்லியன் ரூபா நிதி மேற்பட்ட நிதி தேவை என்றும் அதற்கான நிதி கிடைக்கப் பெறும் பட்சத்தில் குறித்த வீதி புனரமைக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.