கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தும் வகையில் அமைத்துக் கொடுக்கப்பட்ட நல்லெண்ணெய் உற்பத்தி ஆலை நீண்டகாலமாக பயன்படுத்தப்படாத செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட கல்விளான் கிராமத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தும் வகையில் அமைத்துக் கொடுக்கப்பட்ட நல்லெண்ணெய் உற்பத்தி ஆலை நீண்டகாலமாக பயன்படுத்தப்படாத செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்விளான் சிவபுரம் பகுதியில் துணுக்காய் பிரதேச செயலகத்தின் கைத்தொழில் அதிகார சபையினால் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு பிரதேச பெண்கள் அமைப்பு ஒன்றிடம் கையளிக்கப்பட்ட நல்லெண்ணெய் உற்பத்தி ஆலை இதுவரை பயன்படுத்தப்படாத நிலையில் செயல் இழந்து காணப்படுகிறது.குறிப்பாக கிராம மட்ட பெண்கள் அமைப்புக்களை வலுப்படுத்தும் வகையிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் தொழில்வாய்ப்பு மற்றும் வருமானம் கருதி வழங்கப்பட்ட இத்திட்டமானது செயலிழந்து காணப்படுகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளனர்.