கிளிநொச்சி பூநகரி ஏ -32 வீதியின் மண்டைக்கல்லாறு பகுதியில் உவர்நீர் தடுப்பு சுவர் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் இராஜகோபு தெரிவித்துள்ளனர்
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தின் ஒரு பகுதி மற்றும் குஞ்சுக்குளம் திக்காய் போன்ற பகுதிகளில் சுமார்650 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளதுடன் குறித்த நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.அதாவது ஏற்கனவே இருந்த உவர்நீர்த் தடுப்பணைகள் சேதமடைந்த நிலையில் கடந்த காலங்களில் கடல்நீர் மண்டைக்கல்லாறு வழியாக பரவி இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் இவ்வாறு ஒவர் பரம்பல் அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்குறிப்பாக மீள்குடியேற்றத்தின் பின்னர் தாங்கள் பயிர் செய்து வந்த நிலங்கள் கூட தற்போது உவர் நிலங்களாக மாறி வருவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்எனவே தமது விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில் உவர்நீர்த் தடுப்பணைகளை அமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்இந்த விடயம் தொடர்பில் பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது ஏ 32 வீதியின் மண்டைக்கல்லாறு பாலத்திற்கு அண்மித்த பகுதியில் உவர்நீர் தடுப்பு சுவர் ஒன்றை அமைக்கும் போது இதனை முழுமையாக தடுக்க முடியும் இது தொடர்பில் ஆய்வுகளை மேற் கொண்டு அதனை Integrated watershed & water Resources planning project (I.w.wR.M.P) என்ற திட்டத்தின் செய்வதற்குரிய முன்மொழிவுகளை அனுப்பியுள்ளோம்மேற்படி திட்டத்தின் கீழ் தடுப்பு சுவர்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன இது தொடர்பான வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்து இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்