முல்லைத்தீவு துணுக்காய் கமநல சேவைகள் திணைக்கத்தின் கீழுள்ள உயிலங்குளத்தினை புனரமைப்பதற்கான கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்திருப்பதாக கமநல சேவை
முல்லைத்தீவு துணுக்காய் கமநல சேவைகள் திணைக்கத்தின் கீழுள்ள உயிலங்குளத்தினை புனரமைப்பதற்கான கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்திருப்பதாக கமநல சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் த.பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்முல்லைத்தீவு துணுக்காய் கமநல சேவை நிலையத்தினன் கீழுள்ள உயிலங்குளம் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக குளத்தின் அணைக்கட்டில் அரிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் மற்றும் விவசாயிகள் இரானுவத்தினர் ஆகியோரின் உதவியுடன் குளத்தின் அணைக்கட்டு பாதுகாக்கப்பட்டது.குறித்த குளத்தின் அணைக்கட்டைப் புனரமைக்க வேண்டிய தேவை இருப்பதாக விவசாயகளும் விவசாய அமைப்புக்களும் சுட்டிக் காட்டியுள்ளன.ஆனால் இன்றுவரை குறித்த குளத்தின் அணைக்கட்டு புனரமைக்கபடாத நிலையில் காணப்படுகின்றது கடந்த காலங்களிலே பல்வேறு திட்டங்களில் அதன் புனரமைப்புப் பணிகளுக்கான முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெறாததால் குளத்தின் அணைக்கட்டு புனரமைக்கப்படவில்லை குறிப்பாக இந்த குளத்தின் அணைக்கட்டு போக்குவரத்து பாதையாக பயன்படுத்துவதனால் இதனை புனரமைப்பதில் இடர்பாடுகள் கானப்படுவதாகவும் விவசாயிகளால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுஇந்த விடயம் தொடர்பில் கமநல சேவை நிலையத்தன் பெரும்பாக உத்தியோகத்தர் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது மேற்படி உயிலங் குளத்தில் அறுபத்திமூன்று பயனாளிகள் 139 ஏக்கர் வயல் காணிகளில் பயிர் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது குளத்தை புனரமைப்பதற்கான மதிப்பீடுகள் ஆரம்பத்தில் செய்யப்பட்டது அதற்கென 10 மில்லியன் ரூபாதேவை என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது ஆனால்தற்போது அதிகரித்த அளவில் தேவை காணப்படுகின்றதுஅதேவேளை குறித்த அணைக்கட்டின் ஊடாக துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட விவசாய கிராமங்களுக்கான பாதையாக காணப்படுகின்ற நிலையில் குளத்தின் அணைக்கட்டின் ஊடாகவே பயணம் மேற்கொள்ளப்படுகிறது ஆகவே அணைக்கட்டுக்கு கீழான பகுதியில் வீதி அமைக்கப்படும் போது தான் குளத்தினைன புனரமைக்க கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதே வேளை வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த வீதியை புனரமைப்பதற்கு 44 மில்லியன் ரூபா தேவை என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதுஇவ்வாறு இரண்டு திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் இவ் வீதியையும் குளத்தின் அணைக்கட்டையும் புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டி உள்ளனர் எனவே எதிர்வரும் காலங்களில் இக்குளம் புனரமைக்கப்படாதிருந்தால் பெரும் ஆபத்துகளை எதிர் கொள்வதுடன் இதன் கீழான விவசாயமும் பாதிக்கப் பட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்