கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள rஊரியான் குளத்தின் புனரமைப்பு பணிகள் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 10 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள rஊரியான் குளத்தின் புனரமைப்பு பணிகள் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 10 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊரியான் குளத்தின் கீழ் 300 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் காணப்படுவதுடன் குறித்த குளத்தின் அணைக்கட்டு மற்றும் வான் பகுதி என்பன சேதமடைந்து புனரமைக்க படாத நிலையில் காணப்பட்டதுகுறித்த குளத்தை புனரமைத்து தருமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து நீர்ப்பாசன அமைச்சின் ஏற்பாட்டில் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டிய குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன பிரதி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டு சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் குளத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுகடந்த ஏப்ரல் மாதம் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் குறித்த வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இங்கு குறிப்பிடத்தக்கது.