அக்கராயன் பிரதேசத்தில் குடிநீருக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகின்றது. இதனால் தமக்கான குடிநீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட அக்கராயன் பிரதேசத்தில் குடிநீருக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகின்றது. இதனால் தமக்கான குடிநீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் தேசத்தின்பல பகுதிகளில் குடிநீருக்கான நெருக்கடி தொடர்ந்து நிலவி வருவதாகவும் இதனால் தாங்கள் குடிநீரை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களாக காணப்படுகின்ற ஆரோக்கியபுரம் அமைதிபுரம் போன்ற கிராமங்களில் குடிநீர் நெருக்கடி காணப்படுவது.கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசத்துக்கு உடபட்ட கங்காதரன் குடியிருப்பு மற்றும் கோணாவில் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதனால் தமக்கு தேவையான குடிநீரை பெற்றுக் கொள்வதில் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். குறிப்பாக ஒரு சில இடங்களில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பின்தங்கிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவது இல்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை கால்நடைகளுக்கான குடிநீர் பற்றாக்குறையாக காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.