முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா உடலங்களை அடக்கம் செய்ய இடம் ஏற்பாடு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலங்களை இடக்கம் செய்வதற்கான இடம் ஒன்று இன்று 02.09.2021 அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் மாவட்ட மருத்துவமனையில் உடலங்கள் தேங்கி காணப்படுகின்றன வவுனியாவில் உள்ள எரிவாயு தகனமேடை பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழபந்தவர்களின் உடலங்கள் பிரோத அறையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் மாவட்டத்திற்கு உடலங்களை அடக்கம் செய்வதற்கான ஒரு இடம் முதற்கட்டமாக அமையவேண்டும் என்ற மாவட்ட அரசாங்க அதிபரின் திட்டமிடலில் அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திரு.உமைமகள்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், பிராந்திய சுகாதார பணிமனை வைத்திய அதிகாரிகள்,வனவளத்திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முதற்கட்டமாக கூட்டு களஆய்வினை மேற்கொண்டு இடத்தினை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் இன்று(02.09.21) ஈடுபட்டுள்ளார்கள்.
தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் கயட்டை காட்டிற்கு அருகில் வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பது ஆறு ஏக்கர் ஒதுக்கீடு செய்வதாகவும் முதற்கட்டமாக ஒன்றரை ஏக்கர் வனவளத்திணைக்களத்திடம் இருந்து விடுவித்து தருவதாக வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணக்கம் கண்டுள்ளார்கள்.
குறித்த பகுதிக்கு அருகில் மின்சார வசதி உள்ளமையினால் உடலங்களை எரிப்பதற்கு ஏற்றவகையில் மின்சார எரிவாயு தகனமேடை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான நிதி உதவிகளை நலன் விரும்பிகள் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து எதிர்பார்பதாகவும் தெரியவந்துள்ளது.