Category:
Created:
Updated:
யாழ் கொடிகாமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் கொரோனாத் தொற்றினால் 02.09.21 உயிரிழந்துள்ளார்.
ஞானபிரகாசம் பிரகாஷ் என்ற சுயாதீன ஊடகவியலாளர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். 11 வயதில் நோய் ஒன்றின் தாக்கத்தால் நடையை இழந்தார்.
24 வயதுடைய இவர் சிறந்த பத்தி எழுத்தாளர், சில இணையத் தளங்களின் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றிய நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் இவர் தனது முகப்புத்தகத்தில் தனது நோயின் தன்மை தொடர்பில் பதிவேற்றம் செய்திருந்தது உடன் தான் வெகு விரைவில் குணமடைந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.