இரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி இரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் தாங்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தனித்தீவாக காணப்படுகின்ற இரணைதீவு பகுதியில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் 2018ஆம் ஆண்டு முதல் மீள் குடியேறியுள்ள துடன் அங்கே பாரிய முதலீடுகளையும் செய்து தமது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக கடற் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட 45க்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் இதர குடும்பங்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இரணைதீவு பகுதியிலேயே தங்கியுள்ளன.இந்த நிலையில் குறித்த தீவுப்பகுதியில் மருத்துவ வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் குறித்த தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இரணை மாதா நகருக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது என்றும் இவ்வாறு செல்வதற்கு மீன்பிடி படகுகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.அவ்வாறு மீன்பிடி படகுகளில் செல்வதற்கு எரிபொருள் அல்லது அதற்கான பணம் கொடுத்தும் செல்ல வேண்டியுள்ளது அத்துடன் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.இரணைதீவுக்கான பொதுப் போக்குவரத்துச் சேவை ஒன்று ஏற்படுத்தி தருமாறு கோரியுள்ளார். மேற்படி கோரிக்கையானது பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இடமும் அரசிடமும் குறித்த கோரிக்கை முன் வைக்கப் பட்டிருப்பதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.இதே வேளை இரணைதீவில் புரவிப்புயல் காரணமாக சேதமடைந்து கானனப்படும் இறங்கு துறையினையும் புனரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.