முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான நடமாடும் சேவை மூலமான தடுப்புசி தேவைப்படும் முதியவர்கள் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான நடமாடும் சேவை மூலமான தடுப்புசி தேவைப்படும் முதியவர்கள் அந்தந்த உதவி பிரதேச செயலகங்கள் கிராம சேவையாளர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் மாவட்ட செயலகம் அல்லது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்த்தில் கடந்த வாரம் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் ஊனமுற்றோர் மற்றும் பலவீனமானவர்களுக்கு 57 வது 59வது 64வது 66 மற்றும் 68 படைப்பிரிவுகளின் படையினர் இராணுவ வைத்திய படையினருடன் இணைந்து நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
தேசிய திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் வழிகாட்டுதலின் படி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் முல்லைத்தீவு மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு உள்ள ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டியவினால் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தடுப்பூசி வழங்கும் திட்டம் 57வது 59வது 64வது 66 மற்றும் 68 படைப்பிரிவுகளின் தளபதிகளின் மேற்பார்வையில் பிரிகேட் தளபதிகளின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவை தேவைப்படும் முதியவர்கள் அந்தந்த உதவி பிரதேச செயலகங்கள் கிராம சேவையாளர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் மாவட்ட செயலகம் அல்லது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியவற்றுடன் தேவையான ஒருங்கிணைப்புக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.