சினிமா செய்திகள்
பொம்மை படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில்உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த
'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜ
ரூ.190 கோடிக்கு பங்களாவை வாங்கிய நடிகை
பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா மும்பை மையப்பகுதியில் வாங்கி இருக்கும் புதிய பங்களா பற்றித்தான் பட உலகில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.
மீண்டும் வெளியாகிறது 'எந்திரன்' திரைப்படம்
'எந்திரன்' திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகவுள்ளது. அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k அல்ட்ரா எச்.டி.தரத்தில் டால்பி அட்
 'மாமன்னன்' படத்தின் பாடல்கள் வெளியீடு
இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நட
அனுஷ்கா படத்தில் பாடிய தனுஷ்
தற்போது நடிகை அனுஷ்கா இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்
கவர்ச்சியாக நடிப்பேன் - துஷாரா விஜயன்
துஷாரா விஜயன் அளித்துள்ள பேட்டியில், "படங்கள் தேர்வில் எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி
அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தில் சுருக்கங்கள்
பாலிவுட்டின் ராணி என்று கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு, 1997-ல் மணிரத்னத்தின் 'இருவர்' படத்தில் கதாநாயகியாக தனது தி
பல தொழில்களில் கல்லாக்கட்டும் விஜய்
விஜய் தான் தற்போது உள்ள டாப் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கி வருகிறார். அதுவும் தளபதி 68 படத்திற்கு 200 கோடி விஜய் சம்பளம் பெற உள்ளார் என்ற தகவலும்
காதலில் வயதிற்கு வேலை இல்லை என்ற ஆஷிஷ் வித்யார்த்தி
தமிழ் மற்றும் பிறமொழி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து மிரட்டியயவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் சினிமாவிற்கு த
45 வயது நடிகரின் மேல் காதலில் விழுந்த யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அதிக புகழ்பெற்றார். அதைத்தொடர்ந்து விபத்து, தோழியின் மரணம் என பல பிரச்
கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த 5 நடிகைகள்
நடிகைகளை பொறுத்தவரை படத்தில் வாய்ப்பு கிடைக்க ஒரு சில விஷயத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். ஒரு சில நேரங்களில் படத்திற்கு ஏற்ப கவர்ச்
Ads
 ·   · 656 news
 •  · 16 friends
 • S

  24 followers

2018 ஆம் ஆண்டு உடைப்பெடுத்த மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் 16 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுப்பு

முல்லைத்தீவு வவுனிக் குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ்  கடந்த  2018 ஆம் ஆண்டு உடைப்பெடுத்த  மருதங் குளத்தின்  முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் 16 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள மருதங்குளம் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உடைப்பெடுத்த நிலையிலே காணப்படுகின்றது.


மேற்படி உடைபெடுத்த நிலையில் காணப்படும் குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் நீர்ப்பாசன திணைக்கள நிதியிலிருந்து 16 மில்லியன் ரூபா செலவில் முதற் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது


புத்துபட்டு வான் மருதன் குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 125 க்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ள இக்குளமானது கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் உடைப்பெடுத்த நிலையில் மீளவும் புனரமைக்கப்பட்டு சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய வகையில் 9 அடி 6 அங்குலம் கொண்டது கொண்டதும் 2275.96 ஏக்கர் அடி தண்ணீர் கொள்ளளவை கொள்ளக்கூடிய வகையில் இக்குளம் காணப்பட்டது.


கடந்து 2018ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட அதி கூடிய மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக குளத்தின் வான் பகுதியில் நீர்க் கசிவு ஏற்பட்ட நிலையில் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் குளம் உடைப்பு நீர் முழுமையாக வெளியேறியது இருந்தபோதும் 2019ஆம் ஆண்டு வான் பகுதிக்கு குறுக்காக தற்காலிக அணை ஒன்று அமைக்கப்பட்டு ஆறு அடி வரையான நீர் சேமிக்கப்பட்டதுடன் 45 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது


இந்த நிலையில் இக் குளத்தில் நீர் கொள்ளளவை மேலும் இரண்டு அடியால் அதிகரித்து மேலதிக நீரை வெளியேற்றும் வகையில் வான்கதவுகள் அமைக்கப்பட்டு பாரிய அளவில் புனரமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலேயே உலக வங்கியின் நிதியுதவியுடன் குறித்த குளத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


விவசாயிகளின் பயிர் செய்கை நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு நீரை சேமிக்கும் வகையில் தற்போது முதற்கட்டமாக திணைக்கள நிதியிலிருந்து 16 மில்லியன் ரூபா செலவில் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 466
 • More
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads