Category:
Created:
Updated:
இரணைமடு பகுதியில் யானை தாக்கி ஓருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடுகுளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்களிடம் மீன் கொள்வனவிற்காகச் சென்றவரையே யானை தாக்கியுள்ளது.சம்பவத்தில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வியாபாரத்திற்காக சைக்கிளில் மீன் கொள்வனவு செய்ய சென்றபொழுது காட்டருகில் நின்ற யானை துவிச்சக்கர வண்டியை இழுக்க முற்பட்டுள்ளது.இதன்போது தவறி விழுந்த குறித்த நபர் சிறு காயங்களிற்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த யானை வெடி தொழுத்தி காட்டுப்பகுதிக்கு துரத்தி விடப்பட்டுள்ளது.