அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பதினேழு இலட்சத்து பத்தாயிரத்து நூற்று நாற்பத்தாறு சதுரமீற்றர் பரப்பளவில் (1710146) இருந்து இருபத்தொன்பதாயிரத்து நானூற்று மூன்று (29403) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். இன்று (28-08-2021) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அவ்வறிக்கையில்இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணி வெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (ளுர்யுசுP)மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2021 ஆகஸ்ட் மாதம்; 16 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் பதினேழு இலட்சத்து பத்தாயிரத்து நூற்று நாற்பத்தாறு சதுரமீற்றர் பரப்பளவில் (1710146 ) இருந்து இருபத்தொன்பதாயிரத்து நானூற்று மூன்று (29403) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். அத்துடன் கடந்த 16ம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலை மேற்கொண்ட இரத்ததான முகாமில் கலந்து இரத்த தானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.