வரட்சி காலத்தில் தக்காளி செய்கையில் பாரிய அளவு வருமானம் கிடைப்பதில்லை, ஜே கே வி 2 எனும் இனத்தை பரீட்சார்த்தமாக மேற்கொண்ட கிளிநொச்சி விவசாயி
வட மாகாணத்தில் தக்காளி செய்கையும் பிரதான விவசாய உற்பத்தியாக இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் வரட்சி காலத்தில் தக்காளி செய்கையில் பாரிய அளவு வருமானம் கிடைப்பதில்லை எனவும், போதுமான விளைச்சல் கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஜே கே வி 2 எனும் இனத்தை ஒரு விவசாய நிறுவனத்தின் உதவியுடன் பரீட்சார்த்தமாக மேற்கொண்டார் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியை சேர்ந்த விவசாயியான மயில்வாகனம் ராயகோபால் எனும் விவசாயி.குறித்த கெலிஸ் விவசாய நிறுவனத்தினால் மாதிரி செய்கைக்காக வழங்கப்பட்ட ஜே கே வி 2 எனும் தக்காளி இனமானது, வழமை போன்று விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டும் தக்காளி செய்கையில் கிடைக்கும் விளைச்சலுக்கு மேலதிகமான விளைச்சலை இன்று பெற்றுக்கொடுத்துள்ளது.குறித்த தக்காளி இனம் தொடர்பில் மயில்வாகனம் ராயகோபால் இவ்வாறு தெரிவிக்கின்றார்.இந்த தக்காளி இனம் வழமையாக நாம் மேற்கொள்ளும் தக்காளி இனத்தை விட அதிகளவான விளைச்சலை பெற்று தந்துள்ளது. வழமையக மேற்கொள்ளும் தக்காளி செய்கையில் 6 கிலோ வரையிலான விளைச்சலை பெற்றுக்கொள்வோம். இது மாறாக மேலும் அதிக விளைச்சலை தருகினறது. இவ்வாறான தக்காளி இனத்தை இந்த பகுதிகளில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டும் இவ்வாறான வரட்சி காலத்தில் மேற்கொண்டு அதிக வருவாயை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவிக்கின்றார்.வரட்சி காலத்தில் நோய், தேவைக்களவான நீர், அதிக விளைச்சலை கொடுக்கம் இந்த வகை தக்காளியை செய்கை செய்வதன் மூலம் அதிக வருவாயை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த விவசாயி நம்பிக்கை வெளியிடுகின்றார்.குறித்த தக்காளி இனம் தொடர்பில் கெலிஸ் விவசாய நிறுவனத்தின் வடமாகாண விற்பனைப்பிரதிநிதி குமாரசாமி புவனேந்திரா குறிப்பிடுகையில்,சிறுபோக காலத்தில் தக்காளி செய்கை வடமாகாணத்தில் போதிய விளைச்சல் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் இம்முறை இந்த தக்காளி இனத்தை பரீட்சார்த்தமாக மேற்கொண்டிருந்தோம். அந்த தக்காளி இனம் ஏனைய தக்காளி இனங்களை விட அதிக விளைச்சலை கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.குறித்த செய்கையாளரின் தக்காளி செய்கையை இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி அரசகேசரி சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது வரட்சியை தாங்கி அதிக விளைச்சல் கொடுத்துள்ள குறித்த தக்காளி இனம் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவிக்கின்றார்.வழமையாக சிறுபோக செய்கை காலத்தில் வெப்பநிலை அதிகமாக காணப்படும். இவ்வாறான காலநிலையில் தக்காளி செய்கை மேற்கொள்வது சவாலாக காணப்படும். அதனால் நாங்கள் கே சி 1 எனும் கிளிநொச்சிக்கான இனம் ஒன்றையை விவசாயிகள் பெற்று செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் அதில் விதை உற்பத்தி குறைவாக உள்ளது. அது தவிர பத்மா, மகேசு எனும் இரண்டும் அதற்கீடாக காய்ப்பதனால் விவசாயிகள் அதனையும் விரும்புகின்றனர். அவற்றுடன் இந்த இனமும் வெளி மாவட்டங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அவற்றோடு ஒப்பிடும்போது இந்த இனம் அதிக விளைச்சலை கொடுப்பதாகவே நான் கருதுகின்றேன் என தெரிவித்தார்.நாளுக்கு நாள் விவசாய செய்கையில் புதிய தொழில்நுட்ப முறைகள், புதிய இனங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றது. அவ்வாறான இனங்களை அடையாளம் கண்டு விவசாயிகள் செய்கை மேற்கொண்டு அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ராயகோபால் என்ற விவசாயி வெளிப்படுத்துகின்றார்.