Ads
தலீபான்கள் பயங்கரவாதிகள் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். இந்தக் கூட்டத்தில் கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஜி 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தலீபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, அவர்கள் மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றார்.
ஜி7 மாநாட்டை ஒருங்கிணைக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள பிரிட்டன் கூறுகையில், தலீபான்கள் மீது உலக நாடுகள் ஏற்கெனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அதை விலக்குவதா? வேண்டாமா? என்பது குறித்து தலீபான்களின் போக்கை வைத்தே கணிக்க முடியும் எனக் கூறியுள்ளது.
Info
Ads
Latest News
Ads