ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் அதனையும் மீறி வீதியால் பயணிப்போரை வளைத்து பிடித்து பி.சி.ஆர் பரிசோதனைகள்
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் மற்றும் மல்லாவி ஆகிய பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் அதனையும் மீறி வீதியால் பயணிப்போரை வளைத்து பிடித்து பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்றையதினம் பிராந்திய சுகாதார பிரிவினராலும், பொலிசாரினாலும் மேற்கொள்ளப்பட்டன.நாடு முழுவதும் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இவ் வேளையில் மல்லாவி பிரதேசத்தில் வீதியால் பயணிப்போருக்கே பி.சி.ஆர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டனஇதே வேளைஅனைவருக்கும் தடுப்பூசி எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் நடமாடும் சேவை நேற்றைய தினம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பாலைப்பாணி /மூன்று முறிப்பு பகுதிகளிலும் இன்றைய தினம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட விநாயகபுரம் பகுதிகளிலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.