Ads
ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஸ்பெயினில் கொரோனா தொற்றினால், 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஸ்பெயினில் 70ஆயிரத்து 247பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில், இதுவரை மொத்தமாக 31இலட்சத்து 36ஆயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 137பேர் பாதிக்கப்பட்டதோடு 446பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 43ஆயிரத்து 770பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 709பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 27இலட்சத்து 22ஆயிரத்து 304பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads